தனுஷுடன் மரியான் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் பார்வதி. இவர் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை சுட்டிக் காட்டி மன அழுத்தத்துக்கு முதலில் தீர்வு காணுங்கள் என தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
மறைந்தசுஷாந்த்சிங் ராஜ்புத் கொண்டாட்டத்துக்குரிய நடிகர். மகிழத்தக்க மிக அற்புதமான படங்களை தந்திருக்கிறார். ஆனால் அவரது போராட்டதை நாம் யாரும் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. தனது உணர்வுகளுக்கு உண்மையாக இருந்திருக் கிறார்.
சுஷாந்துக்கான மரியாதையை தொடர்ந்து நாம் தரவேண்டும். அதே நேரம் நீங்கள் உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள். அவர்களை பற்றியும் கேட்டறியுங்கள். அவர்கள் மன போரட்டத்தில் இல்லை என்பதை உறுதி செய்யுங்கள். உங்களையும் சோதித்துக் கொள்ளுங்கள். இந்த செயல் போன் மூலமோ அல்லது மெசேஜ் மூலமோ மேற்கொள்ளுங் கள். நான் என்னை சோதித்துவிட்டேன்.
இவ்வாறு மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு அதிலிருந்து விடுபட எச்சரிக்கை செய்துள்ளார்.