லக்னோ: 12 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது; பயங்கரவாதி சுட்டுக்கொலை

Must read

 

லக்னோ:

க்னோவில் வீட்டில் பதுங்கிய பயங்கரவாதியை, 12 மணி நேர போராட்டத்துக்கு பிறகு பாதுகாப்பு படையினர்  சுட்டுக் கொன்றனர்.

ம.பி.,யில், போபால் – உஜ்ஜயின் ரயிலில், நேற்று(மார்ச்,7) காலை, வெடிகுண்டு வெடித்தது. இதில், எட்டு பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் ஒரு பயங்கரவாதி லக்னோவில் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு மத்திய உளவு அமைப்புகள் தகவல் அளித்தன.

இதையடுத்து லக்னோவின் புறநகர் பகுதியான, காகோரியில் உள்ள ஒரு வீட்டில், ஒரு பயங்கரவாதி பதுங்கியிருப்பதை, உ.பி., போலீசாரும், பயங்கரவாத தடுப்புப் படையினரும் கண்டறிந்தனர்.  அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அருகில் உள்ள வீடுகளில் இருந்த மக்கள், பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

பாதுகாப்பு படையினர் தன்னை சுற்றி வளைத்ததை உணர்ந்த பயங்கரவாதி, அவர்கள் மீது துப்பாக்கியால் சுடத் துவங்கியதை அடுத்து, பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து  நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதியை சுட்டுக்கொன்றனர். அந்த வீட்டில் இருந்து இரண்டு துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைபற்றப்பட்டன.

நேற்று மாலை, 3:30 மணிக்கு துவங்கிய இந்த நடவடிக்கை 12 மணி நேரத்துக்கு பின் இன்று அதிகாலை 3.40 மணிக்கு முடிவுக்கு வந்தது. கொல்லப்பட்டபயங்கரவாதிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

More articles

Latest article