மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஏற்பட வாய்ப்பு: பாஜகவை தோற்கடிக்க வியூகம்

Must read

மும்பை:

மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடையே உடன்பாடு ஏற்படும் என்று தெரிகிறது.


கடந்த 2014 தேர்தலில் விதர்பா மண்டலத்தில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில், காங்கிரஸ் 6 தொகுதிகளை இழந்தது. ஒரு தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது.

வரும் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது.
காங்கிரஸும் தேசிவாத காங்கிரஸூம் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்ட்ராவில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி நடக்கிறது.

இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடையே கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

 

More articles

Latest article