சென்னை: லயோலா கல்லூரி  சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிய நிலையில், அது கோவில்  நிலத்தில் கட்டப்படவில்லை என  அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.

லயோலா கல்லூரி அமைந்து இருக்கும் இடம் சென்னையில் உள்ள பிரபல சிவன் ஆலயத்திற்கு சொந்தமான இடமாம். அந்த 96 வருட குத்தகை 2021 உடன் முடிவடைகிறது  என்பது போன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், லயோலா கல்லூரி சொத்து வரி பாக்கி வைத்த காரணத்தினால் பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை 2020-ல் அந்த நோட்டீஸ் வழங்கியதைக் கொண்டு, போலியான பதிவுகள் வெளியிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த விவகாரம் சென்னையில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.

“லயோலா கல்லூரி கோவில் நிலங்களிலோ அல்லது எந்தவொரு  ஆக்கிரமிப்பு நிலத்திலும் கட்டப்படவில்லை என்று கூறியுள்ளார். இந்த புகார்கள் தொடர்பாக,   இந்து அறநிலையத்துறை  அதிகாரிகள் பதிவுகளை சரிபார்த்தனர். அதில், லயோலா  கல்லூரி கோவில் நிலங்களில்  நிலங்களில் கல்லூரி கட்டப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை வருவாய் துறையும் உறுதி செய்துள்ளது என்று தெரிவித்து உள்ளார்.