சென்னை:  அடையாறு, திருவான்மியூர் உள்பட 8 பகுதிகளில் நாளை முதல் 2 நாள்  குடிநீர் சப்ளை நிறுத்தம் செய்யப்படுவதாக  சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

சென்னையின்  குடிநீர் தேவையை புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகள் பூர்த்தி செய்து வருகின்றன. குறிப்பாக தென்சென்னை பகுதிகளின் குடிநீர் தேவைகளை வீராணம் ஏறி உள்பட சில ஏரிகளும், நெம்மேலி உள்பட கடல்நீர் குடிநீராக்கும் நிலையங்களிலும் இருந்து வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,  நெம்மேலியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் 2 நாட்கள் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக, நாளையும், நாளை மறுதினமும் (24, 25ந்தேதி குடிநீர் சப்ளை இருக்காது என்று  சென்னை குடிநீர் வாரியம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,   தென் சென்னையில் உள்ள திருவான்மியூர், வேளச்சேரி, கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையார், பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை ஆகிய பகுதிகளுக்கு நாளை முதல் இரண்டு நாட்களுக்கு (செப் 24, 25) குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் , இதனால் தென் சென்னையில் உள்ள பொதுமக்கள் அனைவரும் முன் எச்சரிக்கையாகவே வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.

மேலும் அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை அறிவித்து உள்ளது. அதன் விவரம் வருமாறு

பகுதி 9 மயிலாப்பூர், மந்தைவெளி பொறியாளர் செல்போன் எண் 81449-30909,

பகுதி 13 அடையார், வேளச்சேரி, பெசன்ட் நகர், திருவான்மியூர் பொறியாளர் செல்போன் எண் 81449-30913,

பகுதி 14 கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி பொறியாளர் செல்போன் எண் 81449-30914,

பகுதி 15 ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் பொறியாளர் செல்போன் எண் 81449-30915.

பொதுமக்கள் மேற்காணும் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயனடையலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.