சென்னை: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில்  குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி வருவதால், தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி நகர தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  இதன் காரணமா  தமிழ்நாட்டின் கரையோர மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் 31ந்தேதி வரையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,

சென்னை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டமுடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்ப நிலை32 ஆகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.