புதுக்கோட்டை: பள்ளி  மாணவியிடம்  போனில்  காதல் சேட்டை செய்த புதுக்கோட்டை புனித பிரான்ஸ் டி சேல்ஸ் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில், மாவட்ட நீதிபதியின் கடுமையான உத்தரவின் பேரிலேயே ஆசிரியர் மீது காவல்துறையினரும், பள்ளி நிர்வாகமும்  நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிரபலமான புனித பிரான்ஸ் டி சேல்ஸ் மெட்ரிக் பள்ளியில்  படிக்கும் பிளஸ்1 மாணவி ஒருவரிடம், பள்ளி  ஆசிரியர் ஒருவர், போனில் காதல் சேட்டை செய்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்த   புகாரின்பேரில்,   மாணவிக்கு போனில் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுளள்ளார். அவரை பள்ளி நிர்வாகம் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாட்டில், பள்ளி, கல்லூரி மாணவிகளிடையே ஆசிரியர்கள், நிர்வாகிகள்,  காதல் மற்றும் காமக்களியாட்டங்கள் செய்வது தொடர்பான புகார்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற புகாரில் சிக்குபவர்கள் போக்சோ சட்டத்தின்படி காவல்துறையினர் கைது செய்து வருகின்றன. அதுபோல, புதுக்கோட்டை,  காலிஃப் நகர், டயமன்ட் நகர் பகுதியில் செயல்பட்டு வரும், செயின்ட்  பிரான்ஸ் டி சேல்ஸ் மெட்ரிகுலேசன் ஹையர் செகண்டரி  ஸ்கூல் ஆசிரியர் ஒருவர், அதே பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவியை கட்டாயப்படுத்தி  செல்போனில் பேசவைத்து காதல் சேட்டையில் ஈடுபட்ட ஆடியோ  தொடர்பாக, அப்பள்ளியைச் சேர்ந்த  , வணிகவியல் ஆசிரியர்  சண்முகதான் (வயது 50) என்பவர் போக்சோவில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியரின் சேட்டை தொடர்வதை அறிந்த பிளஸ்1 மாணவியின்  சகோதரர் ஒருவர், ஆசிரியரின் காதல் சேட்டை தொடர்பான ஆடியோவை பதிவு செய்து, அதை சமுக வலைதளங்களில் வெளியிட்டு அதகளப்படுத்தினார். அதில்,    பள்ளி வகுப்பறையில் , தன் அருகே சந்தேகம் கேட்ட அந்த மாணவி குறித்து பேசும்போது, தன் அருகே வந்து நின்றதே தனக்கு சந்தோசத்தை கொடுத்தது என்பது போல உள்ளது. மேலும் பள்ளியில் இருப்பதால்  ஒன்றும்  செய்யமுடியவில்லை என்று கூறியுள்ளான்.

இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் தரப்பில் இருந்து பள்ளி நிர்வாகத்துக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், ஆனால், பள்ளி நிர்வாகமும், கல்வித்துறை அதிகாரிகளும் முறையான நடவடிக்கை எடுக்காமல், பிரச்சினையை அமுக்க நினைத்ததால், இது குறித்து மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி, காவல்துறை மற்றும் பள்ளி நிர்வாகத்துக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்தே, அந்த பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டு, பள்ளி நிர்வாகத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சண்முக நாதன் மருத்துவ பரிசோதனைக்கு பின் நேற்று மதியம் புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி சத்யா உத்தரவுப்படி, திருமயம் கிளைச் சிறையில் சண்முகநாதன் அடைக்கப்பட்டார்.

ஆசிரியர் சண்முகநாதனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகனும் மகளும் உள்ளனர்.