சென்னை

மிழகத்தில் லாட்டரி சீட்டு மீண்டும் கொண்டு வரப்படமாட்டாது என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதி அளித்துள்ளார்.

தமிழகத்தில் ஏற்கனவே லாட்டரி தடை செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், மீண்டும் கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். இது தமிழகத்தில் கடும் பரபரப்பை உண்டாக்கியது.

இது குறித்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மீண்டும் லாட்டரி சீட்டை திமுக அரசு கொண்டு வர முயற்சிக்க வேண்டாம் என்று உண்மைக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று வரலாற்றில்தனி முத்திரை பதிக்கும் ஒரு பொய் அறிக்கையை  எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்

கடந்த நான்காண்டு கால எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால் தமிழகம் எத்தகைய சரிவை சந்தித்துள்ளது என்பதை 15வது நிதிக்குழுவும் மத்திய ரிசர்வ் வங்கியும் அதிகாரப்பூர்வமாக சுட்டிக்காட்டியுள்ளது

கடந்த 2017-18 மற்றும் 2018-19 மாநில நிதி குறித்த சி.ஏ.ஜி.யின் தணிக்கை அறிக்கை ஆகியவற்றை சட்டமன்றத்துக்கு கூட காட்டாமல் மூடி வைத்தவர் எடப்பாடி பழனிசாமி.  திமுக ஆட்சி அமைந்ததும் அவை மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டு கடந்த அதிமுக ஆட்சியின் தோல்விகள் பொதுவெளிக்கு வந்துள்ளது

கொரோனா  இரண்டாவது அலையை தமிழக அரசு திறமையாக கையாண்டுள்ளதாக பலரும் பாராட்டு தெரிவித்துவரும் நிலையில், லாட்டரி பற்றி ஒரு கற்பனையை தனக்கு தானே உருவாக்கி கொண்டு எடப்பாடி பழனிசாமி இவ்வாறு களங்கம் கற்பிப்பது கண்டனத்திற்குரியது” என்று தெரிவித்துள்ளார்.