சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் ரூ.23,85,700 பணம் 4,870 தங்கம் உள்பட ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக லஞ்சஒழிப்புத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.
முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன்படி இன்று சி.விஜய பாஸ்கர் வீடு உள்பட அவருக்கு சொந்தமான இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 43 இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்றது.
விஜயபாஸ்கரின் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இலுப்பூரில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் விஜயபாஸ்கருக்கு (C VijayaBaskar) சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு (Income Tax Raid) போலீஸ் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த ரெய்டில், ரூ.23,85,700 பணமும், 4,870 கிராம் தங்க நகைகளும், 136 கனரக வாகனங்களின் பதிவு சான்றுகள் & சொத்து பரிவர்த்தனை ஆவணங்கள் கண்டறியப்பட்டு, வழக்கிற்கு தொடர்புடைய ரூ.23,82,700 பணம், 19 ஹார்ட் டிஸ்க்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.