மதுரை:

லகின் மூத்த குடி தமிழ் என்பது கீழடி ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ள நிலையில் சிவகங்கை கீழடி அகழ்வாராய்ச்சி மற்றும் அங்கு கிடைத்துள்ள தொன்ரமையான பொருட்களை காண ஏராளமான பொதுமக்கள் வருகை தருகின்றனர். தன் காரணமாக அங்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சிந்து, கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின், இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாக, சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தையது வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.

வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும்.

இங்கு 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும்,சங்கத்தமிழ் ஆா்வலா்களும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனா்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 முதல் 2018ம் ஆண்டு வரை 4 கட்டங்களாக நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் போது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தொண்மையான மனிதர்களின் நாகரீகம், கலாச்சாரம், பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ளும் வகையில் அரிய வகை பொருட்களும் அவர்கள் பயன்படுத்திய தங்க ஆவரணங்கள், மண்பாண்ட பொருட்கள், சுடுமண் உருவம், சுடுமண் மனித முகம், தமிழி எழுத்து பொறித்த பானை ஓடு, சுடுமண் காதணி உள்ளிட்ட 13,638 தொண்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.

தொடர்ந்து 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த ஜுன் 13ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்த மாதத்துடன் நிறைவடைய இருந்த பணிகளை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொண்மையான மனிதர்கள் வாழ்ந்த பகுதியின் இரட்டை சுவர், நேர் சுவர், வட்டச் சுவர், நீர் வழிப்பாதை, தண்ணீர் தொட்டி , 7 அடுக்குகள் கொண்ட உறை கிணறு, மண்பானைகள், பாசிமணிகள், பிராமின் எழத்து பொறித்த மண் பான்டங்கள், மிகவும் தொன்மையான சுடுமண்னா லான பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள், உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளது.

2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்கள் ஏராளமானோர் நவ நாகரீகமான முறையிலும் தொழில் வளத்தில் மேலோங்கிய நிலையிலும் வாழ்ந்ததற்கான முக்கிய சான்றாக தற்பொழுது கண்டுபிடிக்கப்படும் பொருள்கள் உள்ளதாக தொல்லியல் துறை ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டு வரும் தொன்மையான பொருட்களை தினந்தோறும் ஆயிரக்கணக்கான பள்ளி கல்லூரி மாணவர்களும், எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், இயற்க்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஆச்சரியத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

-பொதிகை குமார்