சென்னை:

ஐடி-யின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, சிறப்புரை ஆறறிய பிரதமர் மோடி,  வந்த உலகின் மிகப்பழமையான மொழி தமிழ்; தமிழை போற்றுவோம்! என புகழாரம் சூட்டினார். இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

அதிமுக:

தமிழ் மீது அதிக பற்று வைத்துள்ள மோடிக்கு எதிராக சமுக வலைதளங்களில் டிரெண்ட் செய்வது தவறானது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

திமுக

ஐஐடி விழாவில் பிரதமர் மோடி தமிழ் பற்றி பேசியதை வரவேற்கிறோம்.  தமிழகத்தில் இந்தியை திணிக்க மாட்டோம் என பிரதமர் மோடி உறுதி அளிக்க வேண்டும் என்று திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன்  தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

தொடர்ந்து இந்தி மொழிக்கு முன்னுரிமை கொடுத்து வந்த மோடி தற்போது தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வரவேற்கத்தக்கது என்று  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறி உள்ளார்.