அகமதாபாத்:

ராமர் இந்துக்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கும் மூதாதையர் தான் என்று யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார்.


குஜராத் மாநிலம் நாடியாத் என்ற இடத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அயோத்தியாவில் ராமர் கோயில் கட்டுவோம் என்று நம்புகின்றேன். அயோத்தியில் ராமர் கோயில் கட்டாமல், மெக்காவிலும், வாடிகன் நகரத்திலேயுமா கட்ட முடியும்.

அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்பதை சர்ச்சைக்குள்ளாக்க வேண்டியதில்லை. ராமர் இந்துக்களுக்கு மட்டும் மூதாதையர் அல்ல, அவர் முஸ்லிம்களுக்கும் மூதாதையர்தான்.
ராமர் கோயில் கட்டுவது என்பது கவுரப் பிரச்சினை. இதற்கும் வாக்கு வங்கி அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்றார்..

இதற்கிடையே, ராம்தேவின் பேச்சுக்கு குறித்து கருத்து தெரிவித்த குஜராத் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மானீஷ் தோஷி, ராம்தேவ் போன்ற மதத் தலைவர்கள் பாஜக ஆட்சியில் பயனடைந்தவர்கள். பாஜகவுக்கு வாக்குகளை பெற்றுத் தரும் நோக்கிலேயே இது போன்று பேசுகிறார்கள் என்றார்.