நெட்டிசன்:
முதல்வர் ஜெயலலிதா இருவாரங்களுக்கு மேலாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை பெரும்பாலான கட்சி தலைவர்கள் பார்த்து வருகிறார்கள்… அதாவது அப்பல்லோ மருத்துவமனை சென்று, அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளை சந்தித்து வருவார்கள்.
1pandi
பின்னர் வெளியே வந்து, செய்தியாளர்களிடம், முதல்வர் நலமோடு இருக்கிறார்… சீக்கிரம் குணமாகி வீடு திரும்புவார் என மருத்துவர்கள் சொன்னதாக கூறிச் செல்வார்கள்.
ஏன் அப்பல்லோ வந்த கவர்னர்கூட அப்படித்தான் அறிக்கை கொடுத்தார், டில்லியில் இருந்து தனி விமானத்தில் வந்து சென்ற அகில இந்திய காங்கிரஸ் துணைத்தைலைவர் ராகுல்காந்தி கூட அதையே சொன்னார், இதில் வியப்பேதும் இல்லை
இதுதான் வழக்கமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பிட்ட மருத்துவர்கள், சசிகலா போன்ற ஒரு சிலர் மட்டுமே ஜெயலலிதாவை பார்த்து வருகிறார்கள். வேறு யார் வந்தாலும் மருத்துவமனை வளாகம் வரை சென்று, முதல்மாடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு விளக்கம் கொடுத்து திருப்பி அனுப்பப்படுவதுதான் நடைபெற்று வருகிறது.
11pandi
அப்படி பார்த்து வந்தவர்களையே பார்த்தேன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
இதுகுறித்து வாட்ஸ் – அப்பில் ஒரு வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த, கலைஞர் திரைக்கதை, வசனம் எழுதிய மலைக்கள்ளன் திரைப்படத்தின் ஒரு காட்சி.  பார்த்தவர்களை பார்த்த கதை இதுதான்.
[KGVID]https://patrikai.com/wp-content/uploads/2016/10/WhatsApp-Video-2016-10-07-at-16-35-08.mp4[/KGVID]