சென்னை:
ஜெயலலிதா  சிகிச்சை பெற்று வரும் அப்போலோ மருத்துவமனைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வந்தார்.

வைகோ -ஜெயலலிதா (கோப்பு படம்)
வைகோ -ஜெயலலிதா (கோப்பு படம்)

முதல்வர் ஜெயலலிதா கடந்த இரு வாரத்திற்கும் மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை  நலம் விசாரிக்க ஏராளமான அரசியல் பிரமுகர்கள் மருத்துவமனைக்கு வந்து செல்கிறார்கள். “ஜெயலலிதாவுக்கு  நோய் தொற்று ஏற்பட்டு விடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதால் யாரும் முதல்வரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை” என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ஜெயலலிதாவை நலம் விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை புரிந்தார்.  அங்கு மருத்துவர்களிடம் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து தகவல் கேட்டறிந்தார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “ஜெயலலிதா முழு உடல் நலம் பெற வேண்டும்.  அப்போலோ மருத்துவமனை தெளிவான அறிக்கை அளித்து வருகிறது” என்று தெரிவித்தார்.
மேலும், ” இந்திய இயறையான்மைக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது.  காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது” என்று வைகோ தெரிவித்தார்.