சென்னை,

த்திய அரசு அறிவித்துள்ள  ‘தேடப்படும் நபர்’  என்ற அறிவிப்புக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், தீர்ப்பை ஒத்தி வைத்து உள்ளது உயர்நீதி மன்றம்.

கடந்த 4ந்தேதி காத்திக் சிதம்பரம் ‘தேடப்படும் நபர்’  என்று திடீர் அறிவிப்பை வெளியிட்டது இந்திய உள்துறை அமைச்சகம்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அனுப்பிய சம்மனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக மத்திய அரசு கூறியது.

பரபரப்பை ஏற்படுத்திய மத்திய அரசின் லுக்அவுட்  அறிவிப்பை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் சென்னை ஐகோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்தார். இந்த மனுமீது விசாரணை நடத்திய ஐகோர்ட்டு, மத்திய அரசுக்கு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து, மத்திய அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது. எனவேதான் அவர் தேடப்படும் நபர் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்தது என்று கூறினார்.

இந்நிலையில்  இருதரப்பு வாதங்கள் நிறைவு அடைந்ததையடுத்து ஆகஸ்ட் 22ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.