டில்லி:

வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் பறக்கும் படையினர் மேற்கொள்ளும் சோதனை காரணமாக மாநில எல்லை சுங்கச் சாவடிகளில் சரக்கு வாகனங்கள் 2 முதல் 9 மணி நேரம் வரை காத்திருப்பதாக அகில இந்திய மோட்டா போக்குவரத்து காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு சர க்குகள் தங்கு தடையின்றி கொண்டு செல்லலாம் என்ற மத்திய அரசின் உத்தரவாதத்துக்கு எதிராக உள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான வரி ரத்து செய்யப்பட்டவுடன் அனைத்து எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டுள்ளது. இவை அகற்றப்பட்டவுடன் சரக்கு லாரிகளின் காத்திருப்பு நேரம் குறைந்துள்ளது.

எந்தெந்த எல்லை பகுதிகளில் சரக்கு வாகனங்கள் அதிக நேரம் நிறுத்தி வைக்கப்படுகிறது என்ற பட்டியலை தயார் செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக காஷ்மீர் மாநிலத்தில் லகான்பூர் எல்லையில் 9 மணி நேரம் த £மதமாகிறது. ஜிஎஸ்டி.க்கு முன்பு இங்கு 12 மணி நேரம் வாகனங்கள் காத்திருந்தன. பஞ்சாப் ராஜ்புரா எல்லையில் 7 முதல் 8 மணி நேரம் வரை சரக்கு வாகனங்கள் காத்து நிற்கின்றன. ஜிஎஸ்டி.க்கு முன்பு இங்கு 10 முதல் 12 மணி நேரம் வரை காத்திருந்தன’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ராஜஸ்தானில் உள்ள சகாஜ்கான்பூர், பரத்பூர், தோல்பூர் ஆகிய எல்லைகளில் சராசரியாக 3 முதல் 4 மணி நேரம் தாமதமாகிறது. குஜராத் ஷாமலிஜ் எல்லையில் 6 முதல் 7 மணி நேரம் வரையிலும், மத்திய பிரதேசத்தில் செண்ட்வா மற்றும் நயாகான் எல்லைகளில் 6 முதல் 7 மணி நேரம் தாமதமாகிறது. மகாராஷ்டிரா பாலாசனர் எல்லை, மேற்கு வங்கம் சிர்குண்டா எல்லைகளிலும் பல மணி நேரத்ததை சரக்கு வாகனங்கள் செலவிடுகின்றன.

ஜிஎஸ்டி.க்கு பின் சோதனை சாவடிகள் அகற்றப்பட்டவுடன் சரக்கு வாகனங்களில் பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது என்பதில் மறுப்பதற்கு இல்லை. அதே சமயம் வட்டார போக்குவரத்து அலுவலர்களின் தொல்லைகளால் ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் போக்குவரத்து போலீசாராலும் தாமதமாகிறது. எல்லைகளில் லஞ்சம் தற்போதும் நிறைந்துள்ளது’’ என்றார்.