2 ஆம் உலகப்போரின் குண்டு கண்டுபிடிப்பு : லண்டன் விமான நிலையம் மூடல்

Must read

ண்டன்

ண்டன் விமான நிலையம் அருகே இரண்டாம் உலகப் போர் சமயத்தில் உபயோகப்படுத்தப்பட்ட வெடிகுண்டு  கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

லண்டன் மாநகர விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.   அதை ஒட்டி லண்டனில் ஓடும் தேம்ஸ் நதிக்கரையில் தோண்டும் பணிகள் நடைபெற்றன.

இந்த நதி விமான நிலையத்தின் அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது.   அப்போது இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பயன்படுத்தப்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று கிடைத்துள்ளது.

இதனால் லண்டன் நகரமே அதிர்ச்சி அடைந்துள்ளது.    மன்னரின் உத்தரவுக்கிணங்க லண்டன் விமான நிலைய ஓடு பாதைகளிலும்,  விமான நிலைய வளாகம் முழுவதிலும் தீவிர சோதனை நடந்து வருகிறது.

விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் மற்றும் வந்து சேரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.   பயணிகள் யாரும் விமான நிலையத்துக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று லண்டனில் இருந்து விமானப் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தவர்கள் விமான நிறுவனங்களை தொலைபேசியில் அணுகி தகவல்களை அறிந்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article