
விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 64’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். பிவி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளராக லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பணிபுரியவுள்ளனர்.
ஆக்ஷன் த்ரில்லராக இந்தப் படம் உருவாகும் எனத் தகவல் வெளியான நிலையில், தற்போது படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த விவரமும் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தின் எடிட்டராக பிலோமின்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
முழுக்க முழுக்க இளைஞர் பட்டாளத்துடன் உருவாகி வருகிறது ‘தளபதி 64’ .
Patrikai.com official YouTube Channel