பெங்களூரு: லஞ்சம் வாங்கிய புகாரில் பாஜக எம்எல்ஏ மாதல் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மாதல் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய சோதனையில், மொத்தம் ரூ. 7.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது கர்நாடக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் கட்சி தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. அதேவேளையில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
இநத் நிலையில், பாஜக எம்எல்ஏ மாதல் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மாதல். இவர் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக லோக் ஆயுக்தாவின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர், பாஜக எம்எல்ஏவின் மகன் பிரசாந்த் மாதலை அதிரடியாக கைது செய்தனர். அவரது அலுவலகத்தில் இருந்து ₹1.7 கோடி ரொக்கம் பறிமுதல் செய்தனர்..
இதையடுத்து, , லோக் ஆயுக்தா அதிகாரிகள் பாஜக எம்எல்ஏ மாதல் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மாதல் வீட்டில் நடத்திய சோதனையில், சுமார் ரூ.6 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.7.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக எம்.எல்.ஏ-வின் மகன் கைது செய்யப்பட்டுள்ளது, கர்நாடகா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.