சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மதியம் லோக் ஆயுக்தா ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சியில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டது. இந்த குழுவில் மாநில சட்டமன்ற சபாநாயகர், மாநில முதல்வர், மாநில எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இடம் பெறுவர். இவர்கள் 3 பேரும் இணைந்து லோக்ஆயுக்தா உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியின்போது, அதாவத 2019ம் ஆண்டு லோக்ஆயுக்தா அமைக்கப்பட்டது. இதையடுத்து, உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணிக்காக அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் கலந்துகொள்ளவதை தவிர்த்த நிலையில், அப்போதைய முதல்வரும், சபாநாயகரும் இணைந்த லோக்ஆய்கதா உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணிகளை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், இன்று மீண்டும் லோக் ஆயுக்தா குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக லோக் ஆயுக்தா 2வது ஆலோசனைக் கூட்டம்: ஸ்டாலின் மீண்டும் புறக்கணிப்பு