சென்னை: மக்களவை தேர்தலையொட்டிடி, இன்று காலை 7மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சேலத்தில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது வாக்கினை செலுத்தினார். அதுபோல, தமிழக அமைச்சர்கள், தேர்தலில் போட்டியிமடும் வேட்பாளர்கள், ரஜினி, அஜித் உள்பட திரையுலகினர் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்தநிலையில், சேலம் எடப்பாடி சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள நெடுங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவரது குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி ராதா, மகன் மிதுன், மருமகள் திவ்யா ஆகியோர் வீட்டிலிருந்து நடந்து வந்து வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் கரூத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தனது வாக்கினை அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குப் பட்ட பெரிய திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வாக்களித்தார்
தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தங்களது வாக்கினை செலுத்தினர்.
திருச்சியில் தில்லைநகர் மக்கள் மன்றம் வாக்குச்சாவடி மையத்தில் அமைச்சர் கே.என்.நேரு வாக்களித்தார்.
விழுப்புரத்தில் உள்ள எம் ஆர் ஐ சி பள்ளியில் வாக்களித்தார் அமைச்சர் பொன்முடி
திருச்சி சிறுமலர் பிரைமரி பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது வாக்கு செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் துரை வைகோ வாக்களித்தார்.
மதுரை அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், நரிமேடு ஆரம்பப்பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன்
கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் வரதராஜபுரம் மாநகராட்சி பள்ளியில் வாக்களித்தார்.
திண்டிவனத்திலுள்ள மரகதாம்பிகை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடி மையத்தில் தர்மபுரி பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி ராமதாஸ் வாக்கு செலுத்தினார்.
பண்ருட்டி அடுத்த மேல்குமாரமங்கலம் கிராமத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் வாக்களித்து தனது ஜனநாயக கடமையாற்றினார்.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.மணி, தனது சொந்த ஊரான சென்னம்பட்டி வாக்குச் சாவடியில், குடும்பத்துடன் வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.
திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாமக தலைவர் ராமதாஸ் தனது குடும்பத்தினருடன் வாக்கினை செலுத்தினார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் முத்தரசன் வாக்களித்தார்
சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க நடிகர் அஜித் குமார் தனது வாக்கினை செலுத்தினார்.
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில், நடிகர் ரஜினிகாந்த் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் இசைஞானி இளையராஜா.
சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் பிரபு தனது குடும்பத்துடன் வாக்களித்தார்