லோக்சபா தேர்தல்2019: மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி 15 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Must read

டில்லி:

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மார்க்சிய கம்யூனிஸ் கட்சி வேட்பாளர்களின்  முதல் பட்டியல் வெளி யிடப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் 15 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை,  சிபிஐ (எம்) தலைவர் பிமன் போஸ் வெளியிட்டுள்ளார்.

இந்த பட்டியலில், ஏற்கனவே  ராய்குஞ்ச்  தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வெற்ற முகமது ஷலீம்  மற்றும் முர்ஷிதாபாத் தொகுதிகளில் போட்டியிட்ட பர்துருசா கானுக்கே  மீண்டும் சீட் கொடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில்,  நாடு முழுவதும் 24 மாநிலங்களில் 53 இடங்களில் போட்டியிட இருப்பதாகவும்,  அதன் அடிப்படையில் தற்போது முதல் வேட்பாளர் பட்டியலினை வெளியிட்டு இருப்பதாகவும் கூறி உள்ளது.

More articles

Latest article