சென்னை:

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த வரும் 8ந்தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அதிமுக தலைமை கூட்டியுள்ளது.

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 8ந்தேதி தொடங்குகிறது. அன்று துணைமுதல் வரும், நிதி மந்திரியுமான ஓ.பன்னீர்செல்வம் 2019-20ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கிறார். அதையடுத்து சட்டமன்றம் ஒத்தி வைக்கப்படும்.

இந்த நிலையில்,  8ம் தேதி மாலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு  உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவை தேர்தலுக்கான பணிகள், கூட்டணி கட்சிகள், தொகுதி பங்கீடு குறித்த ஆலோசிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

பாராளுமன்ற தேர்தல் குறித்து அனைத்து கட்சிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வரு கின்றன.  தொகுதிப்பங்கிடு, கூட்டணி குறித்தும், தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அமைப்பாளர்கள் நியமனங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அதிமுக கூட்டி உள்ளது.