சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் நாளை வேட்புமனு தாக்கல் தொடங்கு கிறது. இதையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழகம்-புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் முற்கட்ட பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. இந்த மாநிலங்களில் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (புதன் கிழமை) தொடங்குகிறது. இதுதொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக நான்கு மனுக்களை தாக்கல் செய்யலாம். இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாம்.
அதன்படி தமிழ்நாட்டிலும் நாளை (ஏப்ரல் 19ந்தேதி) வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனுத்தாக்கல் மார்ச் 27-ந் தேதி கடைசி நாளாகும். அதையடுத்து மார்ச் 28ந்தேதி வேட்பு மனு மீதான பரிசீலனையும், மார்ச் 30ந்தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறவும் கடைசி நாளாகும். இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இதையடுத்து, தேர்தல் ஆணையம், தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட (ஆர்.டி.சி.) அரசு அலுவலகங்கள், வேட்புமனு தாக்கல் செய்யும் இடமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், அடையாறில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.,
வடசென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மூலகொத்தலம் (மின்ட்) மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.,
மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் செனாய் நகர் மாநகராட்சி அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையரும், மாநகராட்சி ஆணையருமான ராதாகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் செய்துள்ளனர்.
வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நபர் டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் என்றால் டெபாசிட் தொகை ரூ.12,500 செலுத்த வேண்டும். அத்துடன் அதற்குரிய ஜாதி சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் வேட்பாளர் தரப்பில் தேர்தல் செலவினங்களுக்கு என புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும். அந்த வங்கி கணக்கு, வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். அதோடு படிவம் 26-ல் பிரமாண வாக்கு மூலத்தில் எல்லா காலங்களும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
வேட்பாளர்கள், தங்களது பிரமாண வாக்குமூலம் 20 ரூபாய் பத்திரத்தில் அளிக்க வேண்டும்.
வேட்பு மனுவுடன் வேட்பாளர் 3 மாதத்துக்குள் எடுத்த ஸ்டாம்ப் சைஸ் போட்டோ வழங்க வேண்டும். போட்டோவில் கட்சி சின்னங்கள், கொடிகள் உள்ளிட்ட எந்த அடையாளங்களும் இருக்கக்கூடாது.
இது தவிர அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சி வேட்பாளர்கள் என்றால் ஒரு முகவராலும், இதர வேட்பாளர்கள் 10 முகவராலும் முன்மொழிய பட வேண்டும். முன்மொழிபவர் வேட்பாளர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள தொகுதியின் வாக்காளராக இருக்க வேண்டும்.
வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர் வேறு பாராளுமன்ற தொகுதியின் வாக்காளராக இருந்தால், அந்த தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலரிடம் இருந்து சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் தேர்தல் கமிஷனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் கோருவதற்கு, சம்பந்தப்பட்ட கட்சியின் தலைமையிடத்தில் இருந்து படிவம் ஏ மற்றும் பி சமர்ப்பிக்க வேண்டும்.
வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு செல்ல அனுமதி உண்டு.
தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக வளாகத்தில் இருந்து 100 மீட்டர் வரையிலும், வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளர்கள் 3 வாகனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், வேட்பாளர்கள் வேட்புமனுக்களை மாவட்ட ஆட்சியர், அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்களில் தாக்கல் செய்யலாம்.
ஆன்லைன் மூலமாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துவிட்டு, உண்மை நகல்களை நேரிலும் அளிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர் போட்டியிடும் தொகுதியின் வாக்காளராகவும் இருந்தால், ஒருவர் மட்டும் முன்மொழிந்தாள் போதும். வேறு ஒரு தொகுதியின் வாக்காளராக இருந்தால், அந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து சான்று பெற்று வரவேண்டும்.
வேட்புமனுத் தாக்கலின் போது வேட்பாளருடன் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு. மனுத்தாக்கலின் போது வேட்பாளர் மற்றும் 4 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள் அனுமதி அளிக்கப்படும்.
ஒரு வேட்பாளர் கடந்த தேர்தலில் ரூ.70 லட்சம் வரை செலவு செய்ய அனுமதிக்கப்பட்டது. அந்த தொகையானது தற்போது ரூ.95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தேர்தல் முடிந்த 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் செலவுக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். தாக்கல் செய்ய தவறினால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக நான்கு மனுக்களை தாக்கல் செய்யலாம். இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாம்.
வேட்புமனுவோடு பொதுப்பிரிவு வேட்பாளர்கள் ரூ.25,000; எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ.12,500 வைப்புத்தொகை செலுத்த வேண்டும். தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டங்களுக்கான காவல்துறை பாதுகாப்புக்கு ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.