சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் 40 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்துள்ளார். அதில், தமிழ்நாடு பாஜக தலைவர், அண்ணாமலை போட்டியிடும் கோவை தொகுதியில் அதிமுக தேர்தல் பொறுப்பாளராக எஸ்.பி.வேலுமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத்தாக்கலும் தொடங்கி உள்ளது. அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு முடிவடைந்தது. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தனி தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்து ஆனது. அதேபோல தேமுதிகவுக்கு விருதுநகர் உள்ளிட்ட 5 தொகுதிகள் வழங்கி ஒப்பந்தம் கையெழுத்தானது. மற்ற 33 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், வரும் 24-ந்தேதி திருச்சியில் அதிமுக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளனர். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்காக தொகுதி வாரியாக அதிமுக தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்து, எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அதிமுக அலுவலகத்தில் இருந்து பணிகளை முறைப்படுத்தும் தேர்தல் பொறுப்பாளராக மூத்த தலைவர் பொன்னையன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை தொகுதியில் அதிமுக தேர்தல் பொறுப்பாளராக எஸ்.பி.வேலுமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஓபிஎஸ் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதிக்கு அதிமுக தேர்தல் பொறுப்பாளராக ஆர்.பி.உதயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
திமுக-வின் ஆ.ராசா போட்டியிடும் நீலகிரிக்கு தேர்தல் பொறுப்பாளராக அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாஜக சார்பில் ராதிகா போட்டியிடும் விருதுநகர் தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்
பாஜக-வின் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை தொகுதிக்கு இசக்கி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வடசென்னை தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென்சென்னைக்கு கோகுல இந்திரா தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி தொகுதிக்கு கடம்பூர் ராஜூ, மதுரை தொகுதிக்கு நத்தம் விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சை தொகுதிக்கு காமராஜ், மயிலாடுதுறை தொகுதிக்கு ஓ.எஸ்.மணியன், திருச்சிக்கு சி.விஜயபாஸ்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முழுமையான விவரங்களை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…
AIADMK Arivippu – MP Election – Constwise Incharges Niyamana Arivippu – 23.3.2024