சென்னை:
மிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.12.61 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக  தமிழக காவல்துறை அறிவித்து உள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களை காவலதுறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்தும், அபராதம் வசூலித்தும் வருகின்றனர்.
இதுதொடர்பாக தமிழக காவல்துறை  டிஜிபி அலுவலகம் சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதவாது,
, தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட ‘‘கடந்த மார்ச் மாதம் 23–ந் தேதி முதல் நேற்று இரவு (14ந்தேதி) 8 மணி வரை 5 லட்சத்து 92 ஆயிரத்து 614 வழக்குகள் பதிவாகியுள்ளன. 6 லட்சத்து 38 ஆயிரத்து 484 பேர் கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 71 ஆயிரத்து 666 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்தை மீறியதாக 12 கோடியே 61 லட்சத்து 84 ஆயிரத்து 99 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை நகரில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையில் போலீசார் நடத்திய சோதனையில் 1,220 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 19 இருசக்கர வாகனங்கள், 14 ஆட்டோக்கள் மற்றும் 14 இலகு ரக வாகனம் என மொத்தம் 47 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.