சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கை நீடிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நாளை மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வெகுவாகக் குறைந்து வந்ததால், பொதுமுடக்கத் தில் இருந்து மேலும் தளர்வுகளுடன் நீட்டித்து  தமிழ்நாடு அரசு ஜூன் 25ந்தேதி தமிழகஅரசு அறிவித்தது. அதன்படி ஜூலை 5ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப் பட்டு உள்ளது. 27 மாவட்டங்களுக்கு தளர்வுகள் அதிகமும், 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் குறைவாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  தளர்வுகள் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.   பேருந்து போக்குவரத்து, கடைகள், மால்கள் திறக்கப்பட்டு இருப்பதால் தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக, மருத்துவ வல்லுநர் குழு மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். இதையடுத்து, ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் மேலும் தளர்வுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளர்வுகளைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு…