01/07/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

Must read

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 4,506 பேர் புதிதாக கொரோவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில், 257பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள  அறிவிப்பின் படி, நேற்று ஒரேநாளில் மாநிலம் முழுவதும்  4,506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24,79,696 ஆக உயர்ந்துள்ளது. நேற்று  மட்டும் தொற்று பாதிப்பில் இருந்து  5,537 பேர் மீண்டுள்ளனர். இதனால் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 24,08,886 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளல், 113 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகுத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32,619 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 15 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 12 பேரும், சேலத்தில் 9 பேரும், திருப்பூரில் 7 பேரும். திருச்சியில் 8 பேரும் பலியாகி உள்ளனர்.

தமிழகம் முழுவதும  கொரோனா பாதிப்புடன் 38,191 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தலைநகர்  சென்னையில் 257 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து,  இதுவரை  5,32,529 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 15 பேர் உயிர் இழந்துதன் மூலம் இதுவரை 8,187 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 5,21,221 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 3,121 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

More articles

Latest article