உள்ளாட்சி தேர்தல்: தமிழகத்தில் 5.81 கோடி வாக்காளர்கள்!

Must read

 சென்னை:
மிழகத்தில் அடுத்த நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.  தமிழகத்தில் மொத்தம் 5.81, 40, 954 வாக்காளர்கள் உள்ளனர் என தேர்தல் ஆணையம்  அறிவித்து உள்ளது.
1voters
தமிழகத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில், செப்டம்பர் 1ம் தேதி வரை வாக்காளர் கணக்கெடுப்பின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியல் சம்பந்தபட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்கப்பட்டது.
மாவட்ட வாரியாக உள்ள வரைவு வாக்காளர் பட்டியல் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் 5,81,40, 954 வாக்காளர்கள் உள்ளது தெரியவந்துள்ளது.
ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2,88,27,134 பேரும்,
பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை, 2,93,09,222 பேரும்,
மூன்றாம் பாலினத்தவர்கள் 4598 பேரும் உள்ளது தெரியவந்துள்ளது.
சென்னையில் ஆண் வாக்காளர்கள், 19,72,641 பேரும், பெண் வாக்காளர்கள், 20,13 768 பேரும, மூன்றாம் பாலினத்தவர்கள் 950 பேரும் உள்ளனர் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

More articles

Latest article