வெளிநாட்டு தமிழர்களிடம் நிதி மோசடி செய்த “நாம் தமிழர்”  பொறுப்பாளர்?

Must read

”நாம் தமிழர்” இயக்கத்தைச் சேர்ந்த “பாக்யராசன் சே”, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் கட்சி நிதி  என பணம் வசூலித்து மோசடி செய்துவிட்டார் என்று, “தமிழச்சி” என்பவர் தனது முகநூல் பக்கத்தில் எழுத.. அது சூட்டைக் ளப்பியிருக்கிறது.

தமிழச்சி
தமிழச்சி

தமிழச்சி எழுதிய பதிவு:
“சமீபத்தில் நடைப்பெற்ற தமிழக தேர்தலில் ‘நாம் தமிழர் கட்சி’ நிதிக்காக ஈழத் தமிழர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட பெருந்தொகையை நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்களில் ஒருவரான பாக்கியராசன்.சே என்பவர் கையாடல் செய்து தனது கட்சியை சேர்ந்த சிலருடன் தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்று வந்துள்ளார்.
தமிழச்சி பதிவு
தமிழச்சி பதிவு

இச்செய்தி தாய்லாந்தில் இருந்து பணம் கொடுத்த ஈழத் தமிழர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு,
தமிழச்சி ஆதாரமாக காட்டும் சுப்பிரமணிய ஆதித்தன் பதிவு
தமிழச்சி ஆதாரமாக காட்டும் சுப்பிரமணிய ஆதித்தன் பதிவு

“நாங்கள் கொடுத்த பணத்திற்கு கணக்கு காட்டுங்கள்” என்று வங்கி கணக்கிற்கு பொறுப்பாளியாக இருந்த பாக்கியராசன்.சே விடம் நெருக்கடியை ஏற்படுத்த, பொது ஊடகங்களின் செயல்பாட்டை தற்காலிகமாக தவிர்த்து வருகிறார் பாக்கியராசன்.சே.” என்று தமிழச்சி குற்றம்சாட்டியுள்ளார்.
இதையடுத்து பாக்யராசனிடம் தொடர்புகொண்டு அவரது தரப்பைக் கேட்டோம்.
அவர், “நான் பணத்துக்காக பொதுப்பணிக்கு வரவில்லை என்பது என்னை அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். அமெரிக்காவில் பத்து வருடங்கள் தனியார் துறையில் நல்ல பொறுப்பில் இருந்தவன் நான். அதைவிட்டுத்தான் பொதுப்பணிக்கு வந்தேன்.
பாக்யராசன் சே
பாக்யராசன் சே

சுப்பிரமணிய ஆதித்தன் என்பவரும் இயக்க நலனில் அக்கறை கொண்டவர்தான். ஏதோ வருத்தத்தில் அப்படி எழுதியிருக்கிறார்.
தவிர நான் தாய்லாந்து சென்றது 2006ம் ஆண்டு. மற்றபடி சமீபத்தில் நான் எந்த  ஒரு வெளிநாடும் செல்லவில்லை” என்றார்.

More articles

Latest article