சென்னை:
உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு நாளை துவங்குகிறது, வேட்புமனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்படும் என்று கூறியுள்ளார்.