அதிமுக-பாமக கூட்டணி முறிந்தது; தனித்துப் போட்டி என பாமக அறிவிப்பு

Must read

சென்னை:
திமுக-பாமக கூட்டணி முறிந்தது; தனித்துப் போட்டியிட உள்ளதாக பாமக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி  ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில், பாமகவின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க இன்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், பாமக தனித்துப் போட்டியிடுவது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
பாமக சார்பில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்றும் அந்த அறிக்கையில் ஜி.கே.மணி குறிப்பிட்டுள்ளார்.

More articles

Latest article