சென்னை

முந்தைய அதிமுக ஆட்சியின் குளறுபடிகளால் நகராட்சி வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு கூறி உள்ளார்.

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு திருவண்ணாமலை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் ஆவார்.   அவர் இன்று தனது திருவண்ணாமலை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.   அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

வேலு தனது பேட்டியில், “இந்த சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் அனைத்து மனுக்களும் இலவசமாக வழங்கப்படும்.  விரைவில் நூலகம், கணினி, தையல் பயிற்சி மையங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட உள்ளது.   இம்மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை அமைக்க முதல்வர் மு க ஸ்டாலினிடம் மனு அளித்துள்ளேன்.

திருவண்ணாமலை புறவழிச் சாலையில் விரைவில் மத்திய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் நகராட்சிகளின் மூலம் வரும் வருவாய்கள் முறையாகக் கிடைப்பதில்லை.   முந்தைய அதிமுக ஆட்சியில் வரி வசூலிப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.