சென்னை:

மிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால், அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் தேதி, ஜனவரி 2ந்தேதிக்கு பதிலாக ஜனவரி 3ந்தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு சாரா பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நேற்றுடன் முடிவடைந்து உள்ளது. இதையடுத்து, விடுமுறைக்கு பிறகு பள்ளி மீண்டும் அடுத்த ஆண்டு (2020) ஜனவரி 2ந்தேதி திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால்,  ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்க ளாக தேர்தல் நடைபெற்று, அந்த வாக்குகள் எண்ணிக்கை ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், பள்ளி திறக்கும் தேதியை 3ந்தேதிக்கு மாற்றி பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்,   தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 2 ஆம் தேதிக்கு பதிலாக 3ஆம் தேதி திறக்கப்படும் .உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை  ஜனவரி 2ஆம் தேதி நடப்பதால் ஜனவரி 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.