சென்னை

ள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது வாக்குச் சாவடிக்குள் செல்ல அனுமதிக்கப்படுவோர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வரும் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.    இந்த வாக்குப்பதிவானது மாவட்ட உறுப்பினர், ஒன்றிய உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர் என நான்கு பதவிகளுக்கு நடைபெற உள்ளது.

இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வாக்குச் சாவடிகளில் ஆண், பெண் வாக்காளர்களுக்கு தனித்தனி வரிசையை ஏற்படுத்த வேண்டும். அத்துடன்  ஆண், பெண் என மாறி, மாறி வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.  வாக்களிக்க வரும் மாற்றுத் திறனாளிகள், முதியோர் மற்றும் கைக்குழந்தைகளுடன் உள்ள பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடிக்குள் வாக்குச்சாவடி அலுவலர்கள், தலைமை வாக்குச்சாவடி அலுவலர் அனுமதியுடன் காவல்துறையினர், மாநில மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள், வாக்காளர்கள், வாக்காளர்களுடன் வரும் கைக்குழந்தைகள், மாற்றுத் திறனாளியின் உதவியாளர் என 9 விதமான நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.