மே.வங்க உள்ளாட்சி தேர்தல்: பா.ஜ.க படுதோல்வி!

கல்கத்தா,

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. பாரதியஜனதா பெரும் தோல்வி அடைந்துள்ளது.

மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மத்திய பாரதியஜனதா அரசு பல்வேறு தொல்லைகளை கொடுத்து வருகிறது.

இருந்தாலும், அனைத்தையும் மீறி மம்தா ஆட்சி செய்து வருகிறார். அங்கு  உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்  ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது

மேற்குவங்க மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆகஸ்ட் 13-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய வெற்றியை அடைந்துள்ளது. பாஜக பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் 7 நகராட்சிகளில் உள்ள 148 வார்டுகளில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 140 இடங்களை வென்றுள்ளது.

மீதியுள்ள 8 இடங்களில் 6 இங்கள் மட்டுமே பாரதியஜனதா கைப்பற்றி மாபெரும் தோல்வியை சந்தித்துள்ளது. மீதி உள்ள இரணடு இடங்களில், ஒன்றில் இடது சாரியும், கடைசி ஒன்றில் சுயேட்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஏழில் மூன்று நகராட்சிகளில், எதிர்க்கட்சிகள் ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியவில்லை. குறிப்பாக ஹால்தியா நகராட்சியில் உள்ள 29 வார்டுகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

துர்காபூர் மற்றும் கூப்பர் கேம்ப் நகராட்சிகளிலும் அனைத்து இடங்களையும் திரிணாமூல் கைப்பற்றியுள்ளது.
English Summary
Local body election in west bengal: BJP Great failure