சென்னை,

ள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு சரிவர கடைபிடிக்கவில்லை என்று திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக சென்னை ஐகோர்ட்டு தமிழக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

மேலும் டிசம்பர் 31க்குள் தேர்தல் நடைபெற வேண்டும் எனவும் உத்தரவிட்டது. ஆனால் தேர்தல் நடைபெற மேலும் கால அவகாசம் தேவை என தமிழகஅரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையில், எந்தவொரு முடிவும் எடுக்க முடியாத நிலை உள்ளது.

இன்று விசாரணைக்கு வந்த உள்ளாட்சி தேர்தல் குறித்த வழக்கில், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவ தற்கான என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அதற்கு, மாநில தேர்தல் ஆணையம்,  தாங்கள் கேட்ட எதையும் மாநில அரசு செய்து தரவில்லை என புகார் கூறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள்,   மாநில தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இல்லாவிட்டால் அந்த அமைப்புக்கு அர்த்தம் இல்லை என்று கருத்து   தெரிவித்து உள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கும் வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.