புதுடெல்லி:
ங்கிக் கடன் தவணையை செலுத்த பொது மக்களுக்கு 2 ஆண்டுகள் வரைகூட அவகாசம் தர முடியும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவலால் கடந்த மாா்ச் மாதம் நாடு தழுவிய பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது வாடிக்கையாளா்களின் இன்னலை கருத்தில் கொண்டு, அவா்களிடம் கடன் தவணைகள் வசூலிக்கப்படுவதை நிறுத்திவைக்க வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி அறிவுறுத்தியது. அதன்படி கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கடன் தவணைகள் வசூலிக்கப்படுவது நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், வங்கியில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய கடன் தவணைக்கான வட்டிக்கு வட்டியை வசூலிக்கும் நடவடிக்கையில் வங்கிகள் ஈடுபட்டன .இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட போது, மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை நீதிபதிகள் பதிவு செய்திருந்தனர்.

இதனிடையே, இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, கடனுக்கான தவணைகளை செலுத்துவதில் இருந்து 2 ஆண்டுகள் வரைகூட அவகாசம் அளிக்க முடியும் என்று பதில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்த விவகாரத்தில் இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று குறிப்பிட்டனர்.