நாமக்கல்: ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்காக அவர்களை ஏமாற்றி கிட்னி திருடப்பட்ட சம்பவம் அதிர்கலைகளை ஏற்படுத்திய நாமக்கல் மாவட்டத்தில், தற்போது கல்லீரல் திருட்டு நடைபெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுபோல வேறு சிலருக்கும் முறையான அனுமதியின்றி மற்ற பாகங்கள் திருடப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து, அவர்களின் கிட்னியை விற்பனை செய்த மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக திமுக நபர்களின் இரண்டு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய தமிழ்நாடுஅரசு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது அந்த பகுதி மக்களிடையே கல்லீரல் திருட்டு நடைபெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. நாமக்கல் அருகே உள்ள பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம், கல்லீரல் எடுக்கப்பட்ட சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கணவரை பிரிந்து, மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர், குடும்பத்தை நடத்த, அதிக வட்டிக்கு கடன் பெற்றுள்ளார். அவரின் வறுமையை தெரிந்து கொண்ட புரோக்கர் ஒருவர், மூளைச்சலவை செய்து, கிட்னி விற்றால் கடனை அடைத்து விடலாம் என்று கூறி சென்னை அழைத்து வந்துள்ளார். அங்கு, பரிசோதனை முடிவுகள் ஒத்து வராததால், அவரது கிட்னிக்கு பதிலாக கல்லீரலை எடுத்துள்ளனர்.
இதனையடுத்து, கல்லீரலை தானமாக கொடுத்த பேபிக்கு 8 லட்ச ரூபாய் வரை பேரம் பேசிய நிலையில், புரோக்கர்கள் 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது எந்த வேலையும் செய்ய முடியாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் தவித்து வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்று மேலும் பலரிடம் கல்லீரல் திருட்டு மட்டுமின்றி பல உறுப்புகள் திருட்டு நடைபெற்றிருக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.
கிட்னி திருட்டில் காவல்துறையினரும் உடந்தை! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
நாமக்கல் கிட்னி திருட்டு: திமுக நிர்வாகி மீது அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு…