சென்னை: ‘லிவ்-இன்’ உறவுகள் கலாச்சார அதிர்ச்சி; . இதனால் பல பெண்கள் பாதிக்கப்படுவதோடு, மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள் என்று கவலை நீதிபதி பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வெளிநாடுகளைப்போன்ற லிவிங் டு கெதர் எனப்படும் திருமணம் செய்யாமலே குடும்பம் நடத்தும் நிகழ்வுகள் தமிழ்நாட்டிலும் அதிகரித்து வருகிறது. லிவிங் டு கெதர் என்பது, திருமணம் செய்யாத ஒரு தம்பதியினர் ஒரு வீட்டையும் அன்றாட வாழ்க்கையையும் பகிர்ந்துகொள்வதே பொதுவாக ‘ஒன்றாக வாழ்வது’ அல்லது சகவாழ்வு எனப்படுகிறது. இது பெரும்பாலும் ஒரு காதல் உறவில் ஈடுபட்டு, செலவுகள் மற்றும் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வதையும், உணவு, சத்தம் மற்றும் தனிப்பட்ட இடம் போன்ற பழக்கவழக்கங்களில் உள்ள வேறுபாடுகளைச் சமாளிப்பதையும் உள்ளடக்கியது.
வரலாற்று ரீதியாக சில கலாச்சாரங்களில் இது ஒரு விலக்கப்பட்ட செயலாகக் கருதப்பட்டாலும், இது இப்போது பெருகி வருகிறது. இது திருமணத்திற்கு ஒரு ‘முன்னோட்டமாக’ அமைந்தாலும், இதற்கு வலுவான தொடர்பு, விட்டுக்கொடுத்தல் மற்றும் வரையறுக்கப்பட்ட எல்லைகள் தேவைப்படுகின்றன; சில சமயங்களில் சட்டப்பூர்வத் தெளிவுக்காக சகவாழ்வு ஒப்பந்தங்கள் மூலம் இது முறைப்படுத்தப்படுகிறது. ஆனால், இதன்முலம் கலாச்சார சீரழிவு ஏற்படுவதும், பல பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் மற்றும் ஏமாற்றப்படுகிறார்கள். இதன் காரணமாக, பலர் தற்கொலையை நாடும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வரும் ‘லிவ்-இன்’ (Live-in) உறவுகள் அதிகமாக பரவி வரும் நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், , இது இந்திய சமூகத்திற்கு ஒரு ‘கலாச்சார அதிர்ச்சி’ இத்தகைய உறவுகளில் இருக்கும் பெண்களுக்கு ‘மனைவி’ என்ற அந்தஸ்தை வழங்குவதன் மூலம் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்து ஏமாற்றியதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி ஒரு நபர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த மனு மீதான விசாரணையின் போது, அந்தப் பெண்ணின் ‘நடத்தை சரியில்லை’ என்பதால் அவரைப் பிரிந்ததாக அந்த நபர் வாதிட்டார்.

இதைக் கண்டித்த நீதிபதி, “ஆண்கள் ஆரம்பத்தில் நவீனமானவர்கள் போலக் காட்டிக்கொண்டு லிவ்-இன் உறவில் ஈடுபடுகிறார்கள். ஆனால், பிரச்சனை வரும்போது அதே உறவில் இருந்த பெண்களின் நடத்தையைச் சீண்டிப் பேசுகிறார்கள். திருமணம் சாத்தியமில்லை என்றால், அந்த ஆண்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது,” என்று எச்சரித்தார்.
‘லிவ்-இன்’ (Live-in) உறவுகள் தொடர்பான இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி தனது தீர்ப்பில் “லிவ்-இன் உறவுகள் இந்திய சமூகத்திற்கு ஒரு கலாச்சார அதிர்ச்சியாக இருக்கலாம், ஆனால் அவை தற்போது எல்லா இடங்களிலும் பரவலாக நடந்து வருகின்றன. பெண்கள் தாங்கள் நவீனமானவர்கள் என்று நினைத்துக்கொண்டு இத்தகைய உறவுகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், திருமண உறவில் கிடைப்பது போன்ற பாதுகாப்பு, இந்த உறவில் இல்லை என்பதைச் சிறிது காலத்திற்குப் பிறகே அவர்கள் உணர்கிறார்கள்.
லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்களுக்கு ‘மனைவி’ என்ற அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். இதன் மூலம், அந்த உறவில் விரிசல் ஏற்பட்டாலும், ஒரு மனைவிக்கு உரிய சட்டப்பூர்வ உரிமைகள் அவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.
தற்போது இத்தகைய உறவுகளில் ஈடுபடும் பெண்களுக்குப் போதிய சட்டப் பாதுகாப்பு இல்லை. இதனால் பல பெண்கள் பாதிக்கப்படுவதோடு, மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள் என்று நீதிபதி கவலை தெரிவித்தார்.
தற்போது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவு 69-ன் கீழ் (திருமணம் செய்துகொள்வதாகப் பொய்யான வாக்குறுதி அளித்து ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வது), ஏமாற்றும் ஆண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். இத்தகைய நபர்கள் சட்டத்தின் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
[youtube-feed feed=1]