டில்லி

ந்த வருடத்துக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இலக்கியப் படைப்புகளான நாவல், சிறுகதை, நாடகம் போன்றவற்றுக்கு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது சாகித்ய அகாடமி விருது ஆகும். கடந்த 1955 ஆம் ஆண்டில் இருந்து.மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பாக விளங்கும் சாகித்ய அகாடமி நிறுவனத்தால் இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருது தமிழ், மலையாளம், ஆங்கிலம் உள்பட அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த படைப்பாளிகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விருது தமிழில், எழுத்தாளர் சோ.தர்மனுக்கு வழங்கப்பட்டுள்ளது.   தமிழில்  சூல் என்ற நாவலுக்காக சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சோ.தர்மராஜ் என்ற இயற்பெயர் கொண்ட இவர், சோ.தர்மன் என்ற பெயரில் எழுதுகிறார். இவர் கோவில்பட்டி அருகே உள்ள உருளைகுடி பகுதியைச்  சார்ந்தவர். ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட 7 நூல்களை சோ.தர்மன் எழுதியுள்ளார்.

ஏற்கனவே “கூகை” என்ற நாவலுக்காகத் தமிழக அரசின் விருதை தர்மன் பெற்றிருக்கிறார்.

விருது பெற்றவர்கள் விவரம் வருமாறு

அசாமிய மொழி     ஜோயஸ்ரீ கோஸ்வாமி மகந்தா

வங்க மொழி            சின்மோய் குகா

போடோ                    புகான் பாசுமதரி

டோக்ரி                      ஓம் சர்மா ஜந்தாரி

ஆங்கிலம்                 சசி தரூர்

குஜராத்தி                  ரதிலால் பொன்சாகர்

இந்தி                           நந்த் கிஷோர் ஆசார்யா

கன்னடம்                   விஜயா

காஷ்மீரி                    அப்துல் அகத் ஹஜினி

கொங்கணி              நிபா ஏ காண்டேகர்

மைதிலி                     குமார் மனிஷ் அரவிந்த்

மலையாளம்            மதுசூதன்நாயர்

மணிப்புரி                 பிர்மங்கோல் சிங்

மராத்தி                      அனுராதா பாடில்

ஒரியா                         தருன் காந்தி மிஷ்ரா

 பஞ்சாபி                     கிர்பால் கஸக்

ராஜஸ்தானி               ராம்ஸ்வரூப் கிசான்

சமஸ்கிருதம்              பென்னா மதுசூதன்

சந்தாலி                       காளிச்ரண் ஹெம்பரம்

சிந்தி                            ஈஸ்வ்ர் மூர்ஜானி

தமிழ்                            சோ தர்மன்

தெலுங்கு                     பண்டி நாராயணசாமி

உருது                            ஷஃபி குத்வாய்