இந்தியன் பிரீமியர் லீக் 2022 க்கான ஏலம் நேற்று நடந்தது இதில் 27 வீரர்களை 8 ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் தக்கவைத்துள்ளனர்.
விராட் கோலி, எம்எஸ் தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் முறையே ஆர்சிபி, சிஎஸ்கே மற்றும் எம்ஐ அணிகளுக்கு தொடர்ந்து விளையாடுவார்கள்.
தக்கவைக்கப்பட்டுள்ள 27 வீரர்களின் பட்டியலை செவ்வாயன்று பிசிசிஐ வெளியிட்டது.
ஒவ்வொரு அணியிலும் மூன்று இந்திய வீரர்கள், இரண்டு வெளிநாட்டு வீரர்கள் மற்றும் இரண்டு உள்ளூர் வீரர்கள் என அதிகபட்சமாக நான்கு வீரர்களை தக்கவைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தலா 4 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்தன. ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹெதராபாத் ஆகிய அணிகள் தலா 3 வீரர்களையும், பஞ்சாப் கிங்ஸ் 2 வீரர்களையும் தக்கவைத்துள்ளன.
தக்கவைக்கப்பட்ட வீரர்களின் முழுமையான பட்டியல் இதோ:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
விராட் கோலி – ரூ. 15 கோடி
கிளென் மேக்ஸ்வெல் – ரூ. 11 கோடி
முகமது சிராஜ் – ரூ. 7 கோடி
மும்பை இந்தியன்ஸ்
ரோஹித் சர்மா – ரூ. 16 கோடி
ஜஸ்பிரித் பும்ரா – ரூ. 12 கோடி
சூர்யகுமார் யாதவ் – ரூ. 8 கோடி
கீரன் பொல்லார்டு – ரூ. 6 கோடி
பஞ்சாப் கிங்ஸ்
மயங்க் அகர்வால் – ரூ. 12 கோடி
அர்ஷ்தீப் சிங் – ரூ. 4 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
கேன் வில்லியம்சன் – ரூ. 14 கோடி
அப்துல் சமத் – ரூ. 4 கோடி
உம்ரான் மாலிக் – ரூ. 4 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ்
ரவீந்திர ஜடேஜா – ரூ. 16 கோடி
எம்எஸ் தோனி – ரூ. 12 கோடி
மொயின் அலி – ரூ. 8 கோடி
ருதுராஜ் கெய்க்வாட் – ரூ. 6 கோடி
டெல்லி கேபிட்டல்ஸ்
ரிஷப் பந்த் – ரூ. 16 கோடி
அக்சர் படேல் – ரூ. 9 கோடி
பிருத்வி ஷா – ரூ. 7.5 கோடி
அன்ரிச் நார்ட்ஜே – ரூ. 6.5 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஆண்ட்ரே ரஸ்ஸல் – ரூ. 12 கோடி
வருண் சக்ரவர்த்தி – ரூ. 8 கோடி
வெங்கடேச ஐயர் – ரூ. 8 கோடி
சுனில் நரைன் – ரூ. 6 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ்
சஞ்சு சாம்சன் – ரூ. 14 கோடி
ஜோஸ் பட்லர் – ரூ. 10 கோடி
யஷஸ்வி ஜெய்ஸ்வால் – ரூ. 4 கோடி