ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு என்ற அமைப்பு கடந்த சில மாதங்களாக உலகின் மகிழ்ச்சியான நாடு எது என்பது குறித்து ஆன்லைன் மூலம் ஆய்வு நடத்தியது.
இந்நிலையில் தற்போது அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், உலகின் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 133வது இடம் கிடைத்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு 122வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 133வது இடத்துக்கு பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 11 இடங்கள் பின் தங்கியுள்ளது.
ஊழல் ஒழிப்பு, சமூக விடுதலை, பணப்புழக்கம் ஆகியவகைகளைக் கொண்டே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது என்றும், மொத்தம் 155 நாடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஐநாவின் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பது பின்லாந்து. இந்த நாட்டு மக்கள்தான் அதிக சந்தோஷத்துடன் மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2வது இடத்தில் நார்வே, 3வது இடத்தில் டென்மார்க், 4வது இடத்தில் ஐஸ்லாந்து, 5வது இடத்தை சுவிட்சர்லாந்தும் பிடித்துள்ளது.