new1
 
புதிய சக்தி அணியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக புதிய சக்தி அணியின் ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதிய அரசியல் கலாச்சாரத்தை முன்வைத்து, ஊழலற்ற ஆட்சி , இலஞ்சமற்ற நிர்வாகம் , மதுவில்லா தமிழகம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாக கொண்டு, சமூக முன்னேற்றத்திற்காக தீவிரமாக செயல்பட்டு வரும் வளர்ச்சி அரசியல் பேசும் சமூக ஆர்வலர்களையும், இளைஞர்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் புதிய சக்தி அணி கடந்த பிப் 23 அன்று உதயமானது.
அதன் தொடர்சியாக மாற்றான தகுதியான வேட்பாளர்களை, ‘புதிய சக்தி அணி’ இந்த தேர்தலில் இனம் காட்டும் முதல் பகுதியாக புதிய சக்தி அணியின் இந்த முதல் வேட்பாளர் பட்டியல் மார்ச் 17 வெளியிடப்பட்டது.
இரண்டாம் வேட்பாளர் பட்டியல்
1.தொகுதி – திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம்
வேட்பாளர் – சதீஷ் B.Tech (IT), வயது -26 – சிறு வயது முதலே அரசியல் ஆர்வம். இளம் வேட்பாளர்
2.தொகுதி – கொளத்தூர், சென்னை மாவட்டம்
வேட்பாளர் – எஸ்.அசோக்குமார். M.A., (Sociology). வயது – 36. சமூக சேவைக்கான மத்திய அரசின் சிறந்த இளைஞனாக தேசிய விருது, தமிழகத்தில் மாநில மற்றும் மாவட்ட விருது.
3.தொகுதி – வில்லிவாக்கம், சென்னை மாவட்டம்
வேட்பாளர் – சையத் நிசாமுதீன், MBA. வயது – 31 .இயக்கம் – Future India Party. PETAவை எதிர்த்து போராட்டம்.
4.தொகுதி – ராயபுரம் , சென்னை மாவட்டம்
வேட்பாளர் – செல்வன், பத்தாம் வகுப்பு. வயது – 26. இயக்கம் – அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம். கூடங்குளம் அணு உலை போராட்டம், 5 மீனவர்கள் விடுதலை போராட்டம்.
5. தொகுதி – மைலம் , விழுப்புரம் மாவட்டம்
வேட்பாளர் – ஞானசேகரன், M.A, M.Phil படித்துக் கொண்டிருக்கிறார், வயது – 25. இயக்கம் – அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம். சென்னை பல்கலைக்கழகத்தில் மதுவிற்கு எதிரான போராட்டம், சுகாதார வசதிகள் ஏற்படுத்து கொடுக்க தொடர் போராட்டம்.
6. தொகுதி – முசிறி, திருச்சி மாவட்டம்
வேட்பாளர் – ஜெயசீலன், BE, LLB , வயது – 31. சமூக பணிக்காக தன்னுடைய வேலையை துறந்தவர். முக்கியமான பொது நல வழக்குகள் தொடுப்பவர்.
7. தொகுதி – பூம்புகார் , நாகை மாவட்டம்
வேட்பாளர் – முகம்மது அலி, பத்தாம் வகுப்பு, வயது – 42 .இயக்கம் – அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம். மது ஒழிப்பு, மீத்தேன் எதிர்ப்பு.
8. தொகுதி – திருப்பரங்குன்றம் , மதுரை மாவட்டம்
வேட்பாளர் – சரவண பாண்டியன், ME, வயது – 28 .இயக்கம் – ஜனநாயக மக்கள் உரிமை கழகம். மது ஒழிப்பு, லஞ்சத்திற்கு எதிரான செயல்பாடுகள்.
9. தொகுதி – நாகர்கோயில் , கன்னியாகுமரி மாவட்டம்
வேட்பாளர் – சுபீ, BE, MBA. வயது – 25 .இயக்கம் – FIP. இலங்கை தமிழர் பிரச்சனைக்கு குரல் கொடுத்தவர்.
10. தொகுதி – உளுந்தூர்பேட்டை , விழுப்புரம் மாவட்டம்
வேட்பாளர் – மு.சூர்யபிரகாஷ், B.Sc, MBA, வயது – 27 .இயக்கம் – VTIK.
11. தொகுதி – திருவொற்றியூர் , சென்னை மாவட்டம்
வேட்பாளர் – சுந்தர், DME, வயது – 28 .இயக்கம் – VTIK. இந்திய மீனவர் கழகம் வட சென்னை மாவட்ட செயலாளர்.
12. தொகுதி – கோவை வடக்கு , கோவை மாவட்டம்
வேட்பாளர் – சிந்து. இயக்கம் – இளைய பாரதம்.
13. தொகுதி – கிணத்துக்கடவு , கோவை மாவட்டம்
வேட்பாளர் – நரேந்திர பிரசாத். இயக்கம் – இளைய பாரதம்.
14. தொகுதி – திருநெல்வேலி , திருநெல்வேலி மாவட்டம்
வேட்பாளர் –. நெல்லையப்பன். இயக்கம் – இளைய பாரதம்.
15. தொகுதி – திருமங்கலம் , மதுரை மாவட்டம்
வேட்பாளர் – அறிவொளி ராமநாதன்.
16. தொகுதி – வேளச்சேரி , சென்னை மாவட்டம்
வேட்பாளர் – செல்வகுமார். இயக்கம் – FIP
17. தொகுதி – சுனில் ராஜ் , கன்னியாகுமரி மாவட்டம்
வேட்பாளர் – செல்வகுமார். இயக்கம் – FIP
18. தொகுதி – திருவெறும்பூர், திருச்சி மாவட்டம்
வேட்பாளர் – சதீஷ் குமார்
19. தொகுதி – நாமக்கல், நாமக்கல் மாவட்டம்
வேட்பாளர் – ஜெகன்னாதன்