சென்னை: தமிழக ஆளுநர் மாளிகையில் நாளை (மே 7), முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க இருக்கிறார். அவரது அமைச்சரவையில் இடம்பெறப் போகும் அமைச்சர்கள் யார் என்ற தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.
நாளை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் 34 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். அதன்படி
மு.க.ஸ்டாலின் – முதல்வர் – பொது, பொது நிர்வாகம், இந்திய நிர்வாக சேவை, ‘ பிற அகில இந்திய சேவை, மாவட்ட வருவாய் அதிகாரிகள், காவல்துறை, வீடு, சிறப்பு முயற்சிகள், சிறப்பு திட்ட அமலாக்கம், மாற்றுத்திறனாளிகள் நலன்
துரைமுருகன் – நீர் பாசனத்துறை அமைச்சர்
கே.என்.நேரு – உள்ளாட்சித்துறை அமைச்சர்
ஐ பெரியசாமி – கூட்டுறவுத்துறை அமைச்சர்
பொன்முடி – உயர்கல்வித்துறை அமைச்சர்
எ.வ.வேலு – பொதுப்பணித்துறை அமைச்சர்
எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் – வேளாண்துறை அமைச்சர்
கே.கே.எஸ்.எஸ்..ஆர்.ராமச்சந்திரன் – வருவாய்த்துறை அமைச்சர்
தங்கம் தென்னரசு – தொழில்துறை அமைச்சர்
ரகுபதி – சட்டத்துறை அமைச்சர்
முத்துசாமி – வீட்டு வசதித்துறை அமைச்சர்
பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்
தா.மோ.அன்பரசன் – ஊரக தொழில்துறை அமைச்சர்
எம்.பி சாமிநாதன் – செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்
கீதா ஜீவன் – சமூக நலத்துறை அமைச்சர்
அனிதா ராதாகிருஷ்ணன் – மீன்வளத்துறை அமைச்சர்
ராஜகண்ணப்பன் – போக்குவரத்து துறை அமைச்சர்
கே.ராமச்சந்திரன் – வனத்துறை அமைச்சர்
சக்கரபாணி – உணவுத்துறை அமைச்சர்
வி.செந்தில் பாலாஜி – மின்சாரத்துறை அமைச்சர்
ஆர்.காந்தி – கைத்தறித்துறை அமைச்சர்
மா.சுப்ரமணியன் – சுகாதாரத்துறை அமைச்சர்
பி.மூர்த்தி – வணிக வரி, பதிவுத்துறை அமைச்சர்
எஸ்.எஸ்.சிவசங்கர் – பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர்
பி.கே.சேகர் பாபு – இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்
பழனிவேல் தியாகராஜன் – நிதி, மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்
சா.மு.நாசர் – பால் வளத்துறை அமைச்சர்
செஞ்சி கே.எஸ்.மஸ்தான் – சிறுபான்மையினர் நலன் துறை அமைச்சர்
அன்பில் மகேஸ் பொய்யாமொழி – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
சிவ.வீ.மெய்யநாதன் – சுற்றுச்சூழல், விளையாட்டுத் துறை அமைச்சர்
சி.வி.கணேசன் – தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
மதிவேந்தன் – சுற்றுலாத்துறை அமைச்சர்
கயல்விழி செல்வராஜ் – ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர்