புதுச்சேரி: தமிழகத்தின் டாஸ்மாக் விலைக்கு நிகராக புதுச்சேரியில் மதுபானங்கள் விலையை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், நேற்று புதுச்சேரியில் மதுபானங்கள் விற்க அனுமதி அளித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்திருந்தார்.
இந் நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் விலைக்கு நிகராக புதுச்சேரியில் மதுபானங்கள் விலையை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் விற்கப்படாத மதுபானங்களை புதுச்சேரியில் விற்றால் கூடுதலாக 25 சதவீதம் கொரோனா வரி விதித்தும், புதுச்சேரியில் விற்கப்படும் மதுபானத்திற்கு 20% கொரோனா வரி விதித்தும் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.