பெங்களூரு

துபானங்களின் விலை கர்நாடகாவில் மீண்டும் உயர்ந்துள்ளதால் மதுப்பிர்யர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2023-ம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல், பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் உள்ளிட்ட 5 உத்தரவாத திட்டங்களை படிப்படியாக அமல்படுத்தி இந்த திட்டங்கள் அனைத்தும் தற்போது நடைமுறையில் உள்ளன.

அதே வேளையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபிறகு கர்நாடகாவில் 2 முறை மதுபானங்கள் விலை ஏற்கான்வெ உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 3-வது முறையாக மதுபானம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அண்மையில் பீர் விலை பாட்டிலுக்கு ரூ.10 அதிகரிக்கப்பட்ட து. இ

கர்நாடகத்தில் இந்திய தயாரிப்பு மதுபானங்களின் விலை தற்;போது 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதற்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. அதாவது ஒரு குவார்ட்டர் பாட்டில் விலை ரூ.25 வரையிலும், ஒரு புல் பாட்டில் விலை ரூ.100 வரையும் உயர்ந்துள்ளது.

நடப்பு ஆண்டில் கலால் வரி வருவாய் இலக்கு ரூ.40 ஆயிரம் கோடியாக கர்நாடக அரசு நிர்ணயித்துள்ளதால் இந்த இலக்கை அடையும் நோக்கத்தில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை உயர்வால் கலால்துறைக்கு கூடுதலாக ரூ.1,400 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் மதுபானங்களின் விலை உயர்வால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பதே உண்மையாகும்.