சென்னை: பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக அறியப்பட்டுள்ள சென்னையில் 5 இடம் உள்பட மயிலாடுதுறை சீர் காழி பகுதிகளில் 15 இடங்களில் என மொத்தம் 20 இடங்களில் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருதாக தகவல் வெளியாகி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் கிராமத்தில் மட்டும் 15 இடங்களிலும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது.
அதுபோல சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 5 இடங்களிலும், மயிலாடுதுறையில் 15 இடங்களிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனை நடத்தி வருகின்றனர். . சென்னையில் புரசைவாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் புறநகர் பகுதிகளிலும், மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் கிராமத்தில் மட்டும் 15 இடங்களிலும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெறுகிறது.