சென்னை: மயிலாடுதுறையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு தொடர்புடைய 9 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, மயிலாடுதுறை, காரைக்கால் உள்பட 9 இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் 4 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த 7 இளைஞர்கள் ஒரு குழுவாக இணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டு பல்வேறு சதிச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் கோவையைச் சேர்ந்த இந்து மதத்தலைவர்களை சிலரை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டியுள்ளனர். இதுதொடர்பான தகவலை கிடைத்ததைத் தொடர்ந்து, இவர்கள் 7 பேரும் 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் என்ஐஏ அதிகாரிகளால் அதிரடியாககைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது, மதநல்லிணக்கத்துக்கு ஊறு விளைவித்த தற்காகவும், இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டதற்காகவும் குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில், தொடர்புடைய முதல் குற்றவாளியான முகமது ஆசிக் என்ற நபர் ஜாமீனில் வெளிவந்த நிலையில், தலைமறைவாகி விட்டார். விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்த நிலையில், அவரை சைகது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவரை தேடி வந்த காவல்துறையினர், அவர் மயிலாடுதுறை அருகே நீடூரில் உள்ள கோழிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்ததை கண்டறிந்து, அவரை கடந்த மே 28-ம் தேதி என்ஐஏ அதிகாரிகள் லோக்கல் போலீசார் உதவியுடன் கைது செய்தனர்.
இதையடுத்து, இன்று அவர்களுக்கு தொடர்புடைய 9 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.