சேலம்:  திமுகவுக்கு எதிரான ஒத்த கருத்துடைய கட்சிகள் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வரலாம் என அழைப்பு விடுத்துள்ள எடப்பாடி பழனிச்சாமி,  கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டி உள்ளார்.

தமிழ்நாட்டில் 2026 மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் அரசியல் களம் அனல்பறக்கதொடங்கி உள்ளது. திமுக கூட்டணி அப்படியே தொடரும் நிலையில், அதிமுக பாஜக கூட்டணி, நாம் தமிழ்ர் கட்சி, விஜயின் தவெக என 4 முனை போட்டி உருவாகி உள்ளது.

இந்த நிலையில்,  சேலம் மாவட்டம் எடப்பாடியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பொங்கலுக்கு ரேசன் அட்டைக்கு ரூ.5000 வழங்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்தபோது தி.மு.க. வைத்த கோரிக்கையை தான் அ.தி.மு.க. தற்போது வைக்கிறது என்றார்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி எதையுமே செய்யவில்லை என்றும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

100நாள் வேலைதிட்ட பெயர் மாற்றம் தொடர்பான கேள்விக்கு , 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் தொடர வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை உள்ளது என்றவர், ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்களுக்கு  150 நாட்கள் வேலை கொடுத்ததா?, இப்போது எதிர்ப்பது ஏன் என கேள்வி எழுப்பியவர், இது அரசியல் நாடகம் என்றார்.

காவிரி விவகாரம் தொடர்பாக  கேள்விக்கு, இருகுறித்து திமுக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில்  பேசி இருக்க வேண்டும் என்றார்.

தமிழ்நாட்டில், * ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் கடன் அதிகரித்து கொண்டிருக்கிறது.  தமிழக அரசு பொருளாதார நிபுணர் குழுவை அமைத்த பின்னர் தான் கடன் அதிகரித்துள்ளது.  கொரோனா காலத்திலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம் என்றவர்,   இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது என்றார்.
த.வெ.க. தூய சக்தியா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றவர், த.வெ.க. தூய சக்தி என்ற விஜயின் பேச்சிற்கு கே.பி.முனுசாமி பதில் அளித்து விட்டார் என்றார்.

 த.வெ.க.வை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூட்டணிக்கு அழைத்தது பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்றவர் திமுகவுக்கு எதிரான ஒத்த கருத்துடைய கட்சிகள் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வரலாம் என அழைப்பு விடுத்தார்.

எஸ்ஐஆர் தொடர்பான கேள்விக்கு பதில் கூறிய எடப்பாடி இறந்தவர்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில் உயிர்பெற்று வந்து தி.மு.க.வுக்கு வாக்களித்தனர்‘ என்று நக்கலபக தெரிவித்தவர்,   அ.தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

[youtube-feed feed=1]